பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியாக 4 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியாக 4 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது

Update: 2021-09-08 20:33 GMT
மலைக்கோட்டை
திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பாலசுப்ரமணியன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு உறவுக்கார பெண்ணான செல்வகுமாரி என்பவரை காதலித்து கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாலசுப்ரமணி வெளிநாடு சென்று விட்டதால் செல்வகுமாரி தனது தாய் வீடான உளுந்தூர்பேட்டையில் தங்கியிருந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3½ வயதில் ஒரு ஆண் குழந்தையும், 10 மாதத்தில் கை குழந்தை ஒன்றும் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்ரமணியன் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் புது வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது பாலசுப்பிரமணியின் தாய் கொளஞ்சியம்மாள், தங்கை சுகுணாதேவி, தங்கையின் கணவர் முருகன் ஆகியோர் செல்வகுமாரியை பார்த்து அவரது குடும்பத்தினரை திட்டியதுடன் 100 பவுன் நகை மற்றும் ஒரு கார் வரதட்சணையாக கேட்டதாகவும், ஏற்கனவே தனது திருமணத்தின் போது தனது பெற்றோர் போட்ட 12 பவுன் நகையை பெற்றுக்கொண்டு தரவில்லை என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்டை அனைத்து மகளிர் போலீசில் சல்வகுமாரி புகார் அளித்தார். அதன்பேரில், கணவர் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்