பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் என்ஜினீயரிங் மாணவர் பலி

பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்

Update: 2021-09-08 20:23 GMT
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது நண்பர்கள் சுரேஷ் மற்றும் சூர்யா ஆகியோருடன் காரில் உப்பிலியபுரத்தில் இருந்து எரகுடி வழியாக சங்கம்பட்டிக்கு சொந்த வேலை காரணமாக சென்றார். பின்னர் அங்கிருந்து உப்பிலியபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு காமாட்சிபுரம் பகுதியில் ஒரு திருப்பத்தில் கார் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அங்குள்ள புளியமரத்தில் மோதியதுடன், சாலையின் அருகில் உள்ள சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.  அந்த இடம் இருட்டு பகுதியாக இருந்ததால் கார் கவிழ்ந்து கிடந்ததை நீண்ட நேரமாக யாரும் கவனிக்கவில்லை. பின்னர் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
என்ஜினீயரிங் மாணவர் சாவு
 அதன்பேரில், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்குள்ளான கார் மற்றும் 3 பேரையும் மீட்டனர். அப்போது பாபு என்பவரது மகன் சூர்யா (வயது 20)  இறந்து விட்டது தெரிய வந்தது. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும்இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாந்த் மற்றும் சுபாஷ் ஆகியோர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்