சின்னாளப்பட்டி அருகே மருத்துவமனைக்குள் புகுந்த அரியவகை வெள்ளை பாம்பு

சின்னாளப்பட்டி அருகே மருத்துவமனைக்குள் புகுந்த அரியவகை வெள்ளை பாம்பு பிடிபட்டது.;

Update: 2021-09-08 19:35 GMT
சின்னாளபட்டி:
சின்னாளபட்டி அருகே காந்திகிராமம் நேருஜிநகரில் தனியார் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று காலை அரியவகை வெள்ளை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 
பின்னர் இதுதொடர்பாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளை பாம்பை லாவகமாக பிடித்தனர். எனினும் நீண்ட நேரமாக தீயணைப்பு வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அந்த பாம்பு ஆக்ரோஷமாக சீறிக்கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது. 
மருத்துவமனை அருகே சிறுமலையில் இருந்து வரும் சஞ்சீவி ஒடை உள்ளது. இந்த ஓடையில் இருந்து மருத்துவமனைக்குள் இந்த வெள்ளை பாம்பு புகுந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். பின்னர் அந்த பாம்பை சாக்கு பைக்குள் வைத்து வனத்துறை அதிகாரிகளிடம் தீயணைப்பு படைவீரர்கள் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை சிறுமலை வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர்.

மேலும் செய்திகள்