நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் பணி இடைநீக்கம்

சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2021-09-08 18:33 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தவர் ரஞ்சிதபிரியா (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ரஞ்சிதபிரியா அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலர்களை கடுமையாக திட்டுகிறார், வழக்கு தொடர்பாக வரும் போலீசாரை ஒருமையில் அழைக்கிறார், அலுவலகத்துக்கு சரியாக வருவது இல்லை என பல புகார்கள் மாவட்ட கலெக்டருக்கு சென்றன.
இந்த புகார்கள் மீது கலெக்டர் விசாரணை நடத்தி, அதன் விவரங்களை சென்னை சமூக பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்