பெண்ணிடம் 14 பவுன் நகை பறிப்பு

காரைக்குடியில் பெண்ணிடம் 14 பவுன் நகை பறிக்கப்பட்டது.

Update: 2021-09-08 17:48 GMT
காரைக்குடி, 
காரைக்குடி கண்ணுப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் நகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சந்திரா (வயது 54). இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். முத்தூரணி அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் கீழே இறங்கி வந்து ராஜேந்திரனை கீழே தள்ளிவிட்டு அவரது மனைவி சந்திரா அணிந்திருந்த 14 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்