ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கடைகள் இடித்து அகற்றப்படும். வேலூர் கலெக்டர் தகவல்
ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கடைகள் இடித்து அகற்றப்படும்
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரியில் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி அளிக்கப்படும் மனுக்களுக்கு வருவாய்த்துறை மூலம் மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு இடங்களை பாதுகாக்கவும், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு இனிமேல் மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் வழங்கக்கூடாது என்று வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட மின் இணைப்புகளை துண்டிக்கும்படி மின்வாரிய செயற் பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு இடங்களை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அதையும் மீறி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் வீடு, கடைகள் அனைத்து இடித்து அகற்றப்படும்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.