ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Update: 2021-09-08 17:33 GMT
ஓசூர், செப்.9-
ஓசூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரமவருமாறு:-
ஏ.டி.எம்.எந்திரம்
ஓசூர் சிப்காட் அருகே  கோவிந்த அக்ரஹாரம் ராஜாஜி லேஅவுட்டில் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் பொறுப்பாளராக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த பிரதாப் (வயது 26) என்பவர் இருந்துவருகிறார்.
சம்பவத்தன்று அதிகாலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏ.டி.எம். எந்திர அறைக்குள் நுழைந்தார். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றார். ஆனால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பிசென்றார்.
பணம் தப்பியது
இதற்கிடையே மறுநாள் காலையில் எந்திரம் உடைக்க முயற்சி நடந்து இருப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி உள்ள கொள்ளையன் உருவத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்