லட்சுமிபுரம் கொள்முதல் நிலையத்தில் வீணாகும் ரூ.30 லட்சம் நெல் மூட்டைகள்

வீணாகும் ரூ.30 லட்சம் நெல் மூட்டைகள்

Update: 2021-09-08 17:10 GMT
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான நெல் மூட்டைகள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படாமல் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த மே மாதம் எங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்  அதிகாரிகளின் அலட்சியத்தால் குடோனுக்கு எடுத்துச் செல்லப்படாமல் திறந்தவெளியில் வைத்துள்ளனர். மேலும் எங்களுக்கு வழங்க வேண்டிய நெல்லுக்கான உரிய தொகையும் வழங்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் அலட்சியத்துடன் இருந்து வருகின்றனர்.

நெல் கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டைக்கு ரூ.60 கமிஷன் கேட்டு வற்புறுத்துவதாகவும், இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க ஆவன செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்