ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா'

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா'

Update: 2021-09-08 16:57 GMT
கே.வி.குப்பம்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி திவ்யா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான திவியா 108 ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அதிகாலையில் பிரசவத்திற்காக வேலூருக்கு அழைத்து செல்லப்பட்டார். வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே சென்றபோது திவ்யாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் அவருக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் சீதா பிரசவம் பார்த்தார். அப்போது திவ்யாருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்