கடம்பூரில் பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 14 பேர் மீது வழக்கு

கடம்பூரில் பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2021-09-08 15:24 GMT
கயத்தாறு:
கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரவீனா (வயது 30). பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த இவர், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் பலரிடம் மொத்தம் சுமார் ரூ.1 கோடி வரையிலும் கடன் வாங்கியதாகவும், தொடர்ந்து கடன் வழங்கியவர்கள் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக கடம்பூரைச் சேர்ந்த செல்வராணி, குருவம்மாள், சாத்தூரைச் சேர்ந்த ராஜா, கோவில்பட்டியைச் சேர்ந்த மற்றொரு ராஜா, கயத்தாறைச் சேர்ந்த முருகன், சிவசக்தி உள்ளிட்ட 14 பேர் மீது கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்