ரூ.5¼ லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகம்

தேனி அருகே சமுதாய சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2021-09-08 14:22 GMT
தேனி: 

தேனி அருகே ஜங்கால்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புதிதாக சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் கலந்துகொண்டு சமுதாய சுகாதார வளாகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். 

விழாவில் கலெக்டர் பேசுகையில், "தேனி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் 84 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை 14 பணிகள் நிறைவடைந்துள்ளன. 70 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன" என்றார். விழாவில் தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துப்பாண்டி, சந்திரசேகர், உதவி பொறியாளர்கள் சோனா, அஜய்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்