விநாயகர் சிலைகள் விற்பனை

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-09-08 10:29 GMT
உடுமலை
உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.இதைத்தொடர்ந்து வருகிற 10 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சாலையோரம் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு தடைவிதித்துள்ளது.அதேசமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், அவ்வாறு வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலையை தனிநபர் எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்துக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிலைகள் விற்பனை
இந்த நிலையில் உடுமலை தாராபுரம் சாலையில் சிவசக்தி காலனிபகுதியில் சாலையோரம், அச்சு வார்ப்பு மூலம் களி மண்ணால் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வர்ணம் பூசி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதேபோன்று உடுமலை ராஜேந்திரா சாலையிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வியாபாரிகள் கூறும்போது விநாயகர் சிலைகள் விற்பனை குறைவாகவே உள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் இன்று வியாழக்கிழமை விற்பனை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றனர்.
-----

---
உடுமலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்
------------------

மேலும் செய்திகள்