ஆலங்குளம்: விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது

Update: 2021-09-07 22:08 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் வேதமணி மகன் பொன்தங்கமாரி (வயது 53). விவசாயியான இவர் ஆலங்குளம் புதுப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி அவர் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு இது சம்பந்தமாக வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஆலங்குளம் போலீசாருக்கு பொன்தங்கமாரி தகவல் கொடுத்தார். ஆலங்குளம் போலீசார் ஆலங்குளம் புதுப்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டபோது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓடியுள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது பொன்தங்கமாரியிடம் பணம் பறித்ததும், கொலை மிரட்டல் விடுத்ததும் தாங்கள்தான் என்று ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுக்கன்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரியப்பன் (23), புதூர் காலனி தெருவை சேர்ந்த முத்தையா மகன் ரகு (24), புதூர் கீழத் தெருவை சேர்ந்த இசக்கி பாண்டி மகன் முகேஷ் (19) ஆகியோரை கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்