நெல்லை: 1 டன் ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல்

1 டன் ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல்

Update: 2021-09-07 21:47 GMT
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் தலைமையில் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியில் ஒரு காரில் 1 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கக்கன் நகரை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரதீஸ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்களை நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்