ஆலங்குளம்:தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

Update: 2021-09-07 21:44 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரக்குளம் செல்வி நகரைச் சேர்ந்த முப்புடாதி மகன் குருசாமி (வயது 33). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு குருசாமி தனது மனைவி கலைச்செல்வியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த குருசாமி மீண்டும் கலைச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த குருசாமியின் தந்தை முப்புடாதி (55) தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குருசாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முப்புடாதியின் முகத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த முப்புடாதி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குருசாமியை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்