நெல்லைமாநகர போலீஸ் நெல்லை டவுன்பாளையங்கோட்டை என சரகமாக பிரிப்பு

நெல்லை டவுன்பாளையங்கோட்டை என சரகமாக பிரிப்பு

Update: 2021-09-07 21:33 GMT
நெல்லைமாநகர போலீஸ்
நெல்லை டவுன்பாளையங்கோட்டை என சரகமாக பிரிப்பு
நெல்லை, செப்.8-
நெல்லை மாநகர போலீஸ் நெல்லை டவுன், பாளையங்கோட்டை என இரண்டு சரகங்களாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாநகர போலீஸ்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, தச்சநல்லூர் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ், அனைத்து மகளிர் போலீஸ், மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள், பாளையங்கோட்டை, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு, பெருமாள்புரம், மேலப்பாளையம், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மற்றும் நில அபகரிப்பு, சிறுவர் பாதுகாப்பு பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக செந்தாமரைக் கண்ணன் உள்ளார். சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் டி.பி. சுரேஷ்குமார், குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனராக சுரேஷ்குமார் உள்ளனர்.
பிரிப்பு
இந்த நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பிரிவுகள் நெல்லை கிழக்கு மேற்கு என இரண்டு தரவுகளாக பிடிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நெல்லை கிழக்கு பகுதியில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை போக்குவரத்து போலீஸ் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை, சாலை வாகன ரோந்து போலீஸ் பிரிவு-2, மற்றும் பிரிவு-3, மேலப்பாளையம் போலீஸ் நிலையம், பெருமாள்புரம் போலீஸ் நிலையம், சிறுவர் பாதுகாப்பு பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மதுவிலக்கு பிரிவு, மோப்பநாய் பிரிவு, மனித உரிமைப்பிரிவு, ஆயுதப்படை பிரிவு ஆகியவை வருகிறது.
சட்டம்-ஒழுங்கு
இங்கு தற்போது சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக உள்ள டி.பி.சுரேஷ்குமார் அனைத்து பிரிவுக்கும் துணை போலீஸ் கமிஷனராக இருந்து பொறுப்புகளை கவனித்து வருவார்.
நெல்லை மேற்கு பகுதியில் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையம், தச்சநல்லூர் போலீஸ் நிலையம், சந்திப்பு போக்குவரத்து போலீஸ் நிலையம், நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையம், டவுன் போலீஸ் நிலையம், பேட்டை போலீஸ் நிலையம், நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், டவுன் போக்குவரத்து போலீஸ் நிலையம், சாலை வாகன ரோந்து போலீஸ் பிரிவு-1 வருகிறது.
இங்கு தற்போது குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனராக உள்ள சுரேஷ்குமார் அனைத்து பிரிவுக்கும் துணை போலீஸ் கமிஷனராக இருந்து பொறுப்புகளை கவனித்து வருவார்.
இதைப்போல் நெல்லை மேற்கு சரகத்தில் 2 உதவி போலீஸ் கமிஷனர்களும், கிழக்கு சரகத்தில் 5 உதவி போலீஸ் கமிஷனர்களும் உள்ளனர். இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்