நெல்லை:பாலத்தில் தூக்கு போட்டு டாக்டர் தற்கொலை

பாலத்தில் தூக்கு போட்டு டாக்டர் தற்கொலை

Update: 2021-09-07 21:20 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை ரகுமத் நகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 76). ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர். இவர் நேற்று மாலை கே.டி.சி நகர் புறவழிச்சாலை பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் அவர் பாலத்தில் பிணமாக தொங்குவதை கண்ட பொதுமக்கள் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று துரைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்