வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
மானாமதுரை வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் குருமுருகானந்தத்தை ரவுடிகள் தாக்கியதை கண்டித்தும், தாம்பரம் வக்கீல்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு துணை தலைவருமான ரங்கராஜன் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், சேலம் மேட்டூர் வக்கீல் கவிதாவை தாக்கிய மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஓசூர் பெண் வக்கீல் அனுராதாவை மிரட்டி வரும் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் தொடர்ந்து வக்கீல்களுக்கு ரவுடிகளாலும், சமூக விரோதிகளாலும் அச்சுறுத்தல், தாக்குதல் நடைபெற்று வருகின்ற சூழலில், ஒரு சில போலீசாரும் வக்கீல்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு செயல்படுவதை கண்டித்தும், மேற்கண்ட சம்பவங்களுக்கு தமிழக அரசும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.