மாவட்டத்தில் 75 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

மாவட்டத்தில் 75 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Update: 2021-09-07 19:47 GMT
திருச்சி, செப்.8-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,763 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நேற்று 23 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 73,138 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 611 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,014 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்