வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

Update: 2021-09-07 19:27 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 38). இவர் முள்ளிப்பள்ளம் அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மர்ம நபர் இவரிடமிருந்து செல்போன் மற்றும் 300 ரூபாயை வழிப்பறி செய்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காடுபட்டி காவல் நிலையத்தில் குருசாமி புகார் செய்தார். இந்தநிலையில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் எம்.புதுப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(26) என்பதும், அவர் தான் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் அவரை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் பணத்தை  பறிமுதல் செய்தனர்

மேலும் செய்திகள்