200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது
200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது;
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்துள்ளது. இந்த ஆலமரம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிழல் தரக்கூடியதாக இருந்தது. மூன்று தலைமுறையாக அப்பகுதியில் ஒரு அடையாளமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காற்று பலமாக வீசி வந்ததால், அந்த மரம் நேற்று வேரோடு கீழே சாய்ந்தது. 200 வருடம் பழமையான ஆலமரம் சாய்ந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.