அகழாய்வில் மேலும் ஓர் சுடுமண் உறைகிணறு தென்பட்டது

கீழடி அருகே அகரம் அகழாய்வில் மேலும் ஓர் சுடுமண் உறைகிணறு தென்பட்டது.;

Update:2021-09-07 23:59 IST

திருப்புவனம்,

கீழடி அருகே அகரத்தில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழாய்வில் மேலும் ஒரு சுடுமண் உறை கிணறு தென்பட்டுள்ளது.

அகழாய்வு


  சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது.

  அகரத்தில் ஏற்கனவே மண்பாண்டங்கள், செங்கல் சுவர், சுடுமண் பொம்மைகள், பெரிய, சிறிய நத்தை ஓடுகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. முதலில் ஒரு குழியில் 4 அடுக்குகளுடன் கூடிய சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு 2-வது முறையாக மற்றொரு குழியில் ஆய்வுப்பணி நடைபெற்ற போது, அதிலும் ஒரு சுடுமண் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழியில் தொடர்ந்து தோண்டியதில் 14 அடுக்குகளுடன்கூடிய சுடுமண் உறைகிணறாக காணப்படுகிறது.

3-வது சுடுமண் உறை கிணறு


  இந்த நிலையில் மற்றொரு குழியில் தோண்டிய போது, 8 அடி ஆழத்தில் 3-வதாக இன்னொரு உறைகிணற்றில் மேல்பாகம் வெளிப்பட்டு உள்ளது. அதன் மேல்பகுதி வட்டவடிவில் ஒரு மூடியைப் போன்று உள்ளது. தொடர்ந்து ேதாண்டும் போது இந்த உறைகிணறு எத்தனை அடுக்குகளுடன் உள்ளது என தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

  ---------



மேலும் செய்திகள்