ரேஷன்கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

ரேஷன்கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

Update: 2021-09-07 18:29 GMT
நாமக்கல், செப்.8-
நாமக்கல் மற்றும் எலச்சிபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குறைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் ஒன்றியம் காதப்பள்ளி, எலச்சிபாளையம் ஒன்றியம் பொம்மம்பட்டி ரேஷன் கடைகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொருட்களின் இருப்பை சரிபார்த்தார்.
மேலும் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா? பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறதா? என கேட்டறிந்தார்.
எச்சரிக்கை
பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விவரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை இயக்கி அதன் அடிப்படையில் சரிபார்த்தார். ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்தும், விற்பனை முனைய கருவியில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதா ? என்றும் சரிபார்த்தார்.
மேலும், ரேஷன் கடையில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு மூட்டைகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஆய்வின்போது அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்