மூதாட்டியிடம் நகை பறித்த கணவன், மனைவி கைது
மூதாட்டியிடம் நகை பறித்த கணவன், மனைவி கைது;
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி இரட்டை வாடைசெட்டி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 66). இவர் தனது வீட்டின் எதிரே நிறுத்தியிருந்த மொபட்டை காணவில்லை என போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் மும்முனி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ராணி (60) என்பவர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தவாசி கோட்டை மூலைப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது மொபட்டில் வந்த அம்மணம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (40), அவரது மனைவி பானுபிரியா (28) ஆகிய இருவரும் ராணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத சேதராகுப்பம் சாலைக்கு அழைத்துச் சென்று அவர் காதில் அணிந்திருந்த கம்மல், மற்றும் மாட்டலை பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து ராணி வந்தவாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் மற்றும் பானுபிரியாவை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் பெருமாள் என்பவருடைய மொபட்டை திருடியதும் தெரிய வந்தது.