வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-09-07 17:03 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிக்குத்திமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று பேரணாம்பட்டு வட்டவழங்கல் அலுவலர் (பொறுப்பு) வடிவேலுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர், தனி வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வருவாய் துறையினருடன் சென்று ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட வீட்டை சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் 20 மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 அந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடியாத்தம் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர் யார் ென்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்