அவினாசி
திருப்பூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்த மாரன் மகன் பார்த்தீபன் வயது 24. பனியன் நிறுவன தொழிலாளி. இவரும் திருப்பூர் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணும் நெருக்கமாக பழகி கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பார்த்தீபனிடம் கூறியுள்ளார். ஆனால் பார்த்தீபன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த பெண் அவினாசி அனைத்து மகளர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் பார்த்தீபன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.