கயத்தாறில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கயத்தாறு:
கயத்தாறில் சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை 3 மணியளவில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நடக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும், கடந்த 38 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலந்துகொண்டவர்கள்
கயத்தாறு யூனியன் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆனந்தன், பொருளாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்லத்துரை விளக்க உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் பூல்பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சுப்பையா, வட்டார துணைத்தலைவர் பிரான்சிஸ், வட்ட இணைச்செயலாளர் மணிகண்ட பிரகாஷ், வட்ட கிளை செயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.