திருவேங்கடமுடையான் கோவிலில் பவித்ர உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கடமுடையான் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றது.

Update: 2021-09-06 21:51 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நாடகசாலை தெருவில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முதல்முறையாக பவித்ர உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தையொட்டி நேற்று  கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கருட வாகனத்தில் திருவேங்கடமுடையான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்