ஓடையில் முதியவர் பிணம்

சிவகாசியில் ஓடையில் முதியவர் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-06 21:34 GMT
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அனுப்பன்குளம் கண்மாய்கரை நீரோடையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அனுப்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் சங்கிலிபிரபுவிடம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்