நெல்லை:வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது

வாலிபருக்கு அரிவாள் வெட்டு 3 பேர் கைது

Update: 2021-09-06 21:32 GMT
நெல்லை:
நெல்லையை அடுத்த கீழமுன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் வீரபுத்திரனை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி (21), 16 வயது சிறுவன், மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த சின்னதுரை (19) ஆகியோர் என்பதும், காதல் விவகாரத்தில் 3 பேரும் சேர்ந்து வீரபுத்திரனை அரிவாளால் வெட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து சங்கரபாண்டி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்