நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சுப்பு மனைவி தேவி (வயது 35). இவர் நாகர்கோவிலில் மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணும் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தேவியின் கழுத்தில் கிடந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்துச் சென்றனர். இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த மகாராஜன், பாவூர்சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.