கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்
கொல்லங்கோடு அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பட்டா மாறுதல்
கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கிராம நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலகத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஒருவர் வந்தார்.. அவரிடம், ராஜேஷ் ரூ.1,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
பட்டா மாறுதல் பெற வந்தவர், மறுநாள் 500 ரூபாய் நோட்டு 2-ஐ அவரிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கி கொண்டார். பணம் கொடுத்தவர் அதை தனது செல்போனில் பதிவு செய்தார். அப்போது ராஜேஷ் 15 நாட்களுக்குள் முடித்து பட்டா தரலாம். அப்படியில்லாவிட்டால் என்னிடம் பேசுங்கள் என்று கூறுகிறார்.
வைரலான வீடியோ
இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக பட்டா மாறுதல் செய்ய ஆன்லைனில் 60 ருபாய் செலுத்தி பதிவு செய்தால், அந்த ரசீதை கொண்டு போய் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்தால் மட்டும் போதும். அதற்கென்று தனியாக எந்த பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ், அலுவலக பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பிறப்பித்தார்.