கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி திடீர் சாவு

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மூதாட்டி, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்

Update: 2021-09-06 21:01 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மூதாட்டி, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்
கலெக்டர் அலுவலகத்தில் மனு
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வந்தது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி கலெக்டர் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து கொடுத்தும், பெட்டியில் போட்டும் செல்கிறார்கள்.
மூதாட்டி திடீர் சாவு
இந்தநிலையில் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு பலரும் வந்தனர். அதில் மூதாட்டி ஒருவரும் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அவர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். 
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, மூதாட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
மூதாட்டி திடீர் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர், ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி (வயது 75) என்பது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனை
அதை தொடர்ந்து சரஸ்வதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரஸ்வதி இறந்த தகவல் அறிந்த உறவினர்கள், ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்