புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-09-06 20:33 GMT
திருவெறும்பூர்
திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூரில் உள்ள ஒரு டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 5 குட்கா பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக திருவெறும்பூர் சுருளிகோவில் தெருவை சேர்ந்த ரவிக்குமார் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்,திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் தீவனம் வைக்க உத்தரவு
இதேபோல, திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் போலீசார் சோதனையிட்டபோது அங்கு 42 குட்கா பண்டல்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.
இது சம்பந்தமாக வடக்கு காட்டூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த காளியம்மாள் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், ரவிக்குமாரையும், காளியம்மாளையும் திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவித்த நீதிபதி இருவரும் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும், போலீஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும், அங்குள்ள பறவைகளுக்கு தீவனம் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்