மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்

மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்

Update: 2021-09-06 20:30 GMT
மதுரை
மதுரை மாநகராட்சி பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலிகளுக்கு அரசின் உத்தரவுப்படி முழுமையான சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
இந்த போராட்டத்தில் மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநகராட்சி ஊழியர்கள் அண்ணா மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்