புதுச்சேரியில் 5 சார் பதிவாளர்கள் இடமாற்றம்
புதுச்சேரியில் 5 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, செப். 7-
புதுச்சேரியில் உள்ள பதிவாளர் அலுவலகங்களில் பணி செய்து வரும் சார் பதிவாளர்கள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வில்லியனூர் சார் பதிவாளர் உலகநாதன், புதுச்சேரி கிராமப்புற அலுவலகத்திற்கும், இங்கு பணியாற்றி வரும் மணிகண்டன், உழவர்கரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உழவர்கரையில் பணியாற்றும் சிவசாமி வில்லியனூருக்கும், திருக்கனூர் கஜேந்திரன் பாகூருக்கும், அங்கு பணியாற்றும் கிருஷ்ணாநந்தம், திருக்கனூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட பதிவாளர் ரமேஷ் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் 5 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.