நிம்மியம்பட்டு ஊராட்சி வாக்காளர் பட்டியலில் குளறுபடி
நிம்மியம்பட்டு ஊராட்சி வாக்காளர் பட்டியலில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்.
வாணியம்பாடி
நிம்மியம்பட்டு ஊராட்சி வாக்காளர் பட்டியலில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது. 5,101 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த வாக்காளர் பட்டியலில் ஊராட்சியில் உள்ள 3 மற்றும் 7-வது வார்டுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், நேற்று ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசனிடம் புகார் தெரிவித்தனர்.
அடையாள அட்டை ஒப்படைப்பு
மேலும் வார்டில் உள்ள வாக்காளர்கள் 190 பேரின் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து, தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும், சுயநலத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் வார்டுகள் பிரித்தலின்போது நிம்மியம்பட்டு ஊராட்சி செயலாளரும், அளித்த சுபாஷ் என்பவரும் பேசிய ஆடியோவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.