ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ஜானகி (வயது 70). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கழிப்பறை செல்வதற்காக எழுந்து சென்றபோது அருகில் இருந்த இரும்பு கம்பியை பிடித்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நள்ளிரவில் அவரது வீட்டு வழியாக சென்ற உயரமான கனரக வாகனம் ஒன்று மின்சார வயரின் ஒருபகுதியை மோதி இழுத்து சேதப்படுத்தி சென்றுள்ளது.இந்த மின்சார வயர் வீட்டின் மேற்கூரை மீது பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஜானகி தெரியாமல் கைவைத்து மின்சாரம் தாக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.