அரக்கோணத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரக்கோணம்
அரக்கோணம் கோட்ட மின் வாரியத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்யக்கோரி அரக்கோணம் விண்டர்பேட்டையில் உள்ள கோட்ட செயற் பொறியாளர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் சார்பில் ஆவ்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தி தரக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.