ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 10 பேர் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

Update: 2021-09-06 17:40 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்ேபாது அவர் பேசியதாவது:-

10 பேருக்கு டெங்கு காய்ச்சல்

தற்போது மழைக்காலம் என்பதாலும், வட கிழக்கு பருவமழை காலம் தொடங்க இருப்பதாலும்  குடியிருப்புகளில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நல்ல நீரில் இருந்து டெங்கு கொசு உற்பத்தி ஆகின்றது. இதனால் பாதிப்புகள் ஆங்காங்கே கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தற்போது வரை 10 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் கண்டறியப்படும் பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறை கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அதிக அளவு தடுப்பூசி

அரசு தலைமைச் செயலாளர் அறிவுரையின்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் அனைத்து இடங்களிலும், தேவைப்படும் கூடுதல் இடங்களிலும் தடுப்பூசி முகாம் அமைத்து மக்களை ஒன்று திரட்டுவது மற்றும் இதற்கு தேவையான தடுப்பூசிகளை கொண்டு செல்ல வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் செல்ல வாகனங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தயார்செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்