ஆம்பூர் அருகே ஷூ கம்பெனியை பெண் தொழிலாளர்கள் முற்றுகை
ஆம்பூர் அருகே நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து பெண்தொழிலாளர்கள் ஷூ கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து பெண்தொழிலாளர்கள் ஷூ கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நிலுவைத்தொகை
ஆம்பூரை அடுத்த கொம்மேஸ்வரம் பகுதியில் தனியார் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டது. இதனால் பணியில் இருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கம்பெனி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதற்கு நிர்வாகத்தினர் கால அவகாசத்திற்கு பின்னர் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.
முற்றுகை
இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஷூ கம்பெனி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி கோஷமிட்டனர்.