போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு சான்றிதழ்

போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு சான்றிதழ்;

Update: 2021-09-06 17:15 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம்பிரிவு அருகே கடந்த 2-ந் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த வழியாக நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தார். 

அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அந்த மூதாட்டிக்கு யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூதாட்டியின் உடலை பொள்ளாச்சி- உடு மலை சாலையில் உள்ள சுடுகாட்டில் கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டு செல்வகுமார் அடக்கம் செய்தார்.  

இதை அறிந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், ஏட்டு செல்வகுமாரை நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் அவருக்கு இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, அருள் பிரகாஷ் மற்றும் போலீசார் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்