மெட்ரோ ரெயில்பாதை அமைக்க ஆய்வு தொடக்கம்
மெட்ரோ ரெயில்பாதை அமைக்க ஆய்வு தொடக்கம்
கோவை
கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல் படுத்துவதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் ரூ.6,300 கோடி செலவில் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது எந்தெந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பாதை அமைப்பது என்று செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பகுதிகள் உள்பட ஒரே நாளில் 18 இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்திய ரெயில்வேயின் துணை அமைப்பான ரைட்ஸ் அமைப்பு வழிகாட்டுதலில் பிரைம் மெரிடியஸ் நிறுவனம் சார்பில் நவீன கருவி மூலம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
மெட்ரோ ரெயில் பாதைக்கு தூண்கள் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆய்வு மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் கோவை நகரம், கோவை புறநகரம் உள்பட மொத்தம் 75 இடங்களில் இந்த ஆய்வு நடைபெறும் என்றும் ஆய்வு முடிந்தபின்பு வரைபடம் தயாரிக்கப்பட்டு திட்ட மதிப்பீடுக்கு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் பணிகள் தொடங்கும் என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.