நெல் நாற்று நடவு பணி தீவிரம்
காலிங்கராயன் பாசன பகுதிகளில் நெல் நாற்று நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. முதல் போக நன்செய் பாசனத்துக்கு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டது. அதன்பேரில் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெல் விதைப்பு பணி தீவிரமாக நடந்தது. இந்த நெல் நாற்றுகள் தற்போது நன்கு வளர்ந்து உள்ளதால் அவைகள் பிடுங்கப்பட்டு வயல்களில் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
---------------