திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு வினாயிக்கு 255 கனஅடி தண்ணீர் வருகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு வினாயிக்கு 255 கனஅடி தண்ணீர் வருகிறது.
பரவலாக மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை செய்து வருகிறது. நேற்று இரவில் காற்றுடன் கூடிய சாரல் மழை நள்ளிரவு வரை பெய்தது. அதிகபட்சமாக செங்கத்தில் 22.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மற்ற பகுதியில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
போளூர்- 19.6, ஜமுனாமரத்தூர்- 12, திருவண்ணாமலை- 3.2, சேத்துப்பட்டு- 2, கீழ்பென்னாத்தூர்- 1.8.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 அணைகள் உள்ளன. இதில் 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 83.25 அடி தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்த அணைக்கு வினாடிக்கு 255 கன அடி நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
அதேபோல் 60 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் 39.36 அடியும், 22.97 அடி உயரம் கொண்ட மிருகண்டாநதி அணையில் 5.420 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேங்கி உள்ளது. 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத் தோப்பு அணையில் 51.63 அடி தண்ணீர் உள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 697 ஏரிகள் உள்ளன. இதில் ஒரு ஏரியில் மட்டுமே 100 சதவீதம் தண்ணீர் உள்ளது. 25 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீரும், 39 ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீரும், 271 ஏரிகளில் 25 சதவீதம் தண்ணீரும் உள்ளன.