செம்மறியாடு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி
செம்மறியாடு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி
குன்னத்தூர்
குன்னத்தூர் சந்தை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தை ஆகும். குன்னத்தூர் சந்தை வார வாரம் திங்கட்கிழமை நடைபெறும். இப்பகுதியில் காடுகள் அதிகம் இருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் அதிகமாக செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்த்து வருகிறார்கள். குன்னத்தூர் சந்தையில் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா வியாபாரிகள் அதிகமாக வருவார்கள். நேற்று நடைபெற்ற சந்தைக்கு அதிகமாக வெளிமாநில வியாபாரிகள் செம்மறியாடு வாங்க வந்திருந்தார்கள். 10 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையானது. ஆகவே வெளிமாநில வியாபாரிகள் அதிகளவு செம்மறி ஆடுகளை வாங்கி தாங்கள் வந்த சரக்கு வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள்.