கயத்தாறில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கயத்தாறில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;

Update:2021-09-06 17:13 IST
கயத்தாறு:
கத்தாறில் தாலுகா அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக சென்று அதனை கடலில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கட்சி நிர்வாகிகள் கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்துவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத்தலைவர் செல்லத்துரை, கயத்தாறு ஒன்றிய தலைவர் அரிமுருகன், மாவட்ட துணை செயலாளர் ரவி, கோவில்பட்டி நகர செயலாளர் முருகேசன், நகர தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்