மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

மதுரையில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மீண்டும் தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2021-09-05 20:59 GMT
மதுரை,

மதுரையில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மீண்டும் தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

2 பேர் பலி

மதுரையில் நேற்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 19 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 12 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 769 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 143 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 70 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 81 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,157 ஆக உயர்ந்துள்ளது.

எச்சரிக்கை

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், மக்கள் கொரோனா விதிமுறைகளை சரிவர கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்