முன்விரோதத்தில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

சோழவந்தான் அருகே முன்விரோதத்தில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-09-05 20:50 GMT
சோழவந்தான்,

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பழைய இரும்பு கடை வைத்து உள்ளார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த டேனியல் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று இரவு பழைய பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த டேனியல் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.இதை தடுக்க சென்ற அவரது அண்ணன் கந்தசாமி, அக்காள் பத்ரகாளி மற்றும் தங்கம்மாள் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காடுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்