விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
நாங்குநேரி அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி இறந்தார்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள தெய்வநாயகப்பேரியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பொன்னாக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த மொபட்டும், பரமசிவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பரமசிவன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவன் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.